Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

சங்ககிரி பேச்சியம்மன், ஓங்காளியம்மன் கோயிலில் அமாவாசை சிறப்புப் பூஜைகள்

by Editor

ஆன்மீகம்
சங்ககிரி பேச்சியம்மன், ஓங்காளியம்மன் கோயிலில் அமாவாசை சிறப்புப் பூஜைகள்

சேலம் மாவட்டம், சங்ககிரி, பழைய எடப்பாடி சாலை பகுதியில் உள்ள அருள்மிகு பேச்சியம்மன், ஓங்காளியம்மன் கோயிலில் அமாவாசையையொட்டி சுவாமிகளுக்கு செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மதுரைவீரன் சுவாமிக்கு செவ்வாய்க்கிழமை செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.

அருள்மிகு பேச்சியம்மன், ஓங்காளியம்மன் சுவாமிகளுக்கு அமாவாசையையொட்டி சந்தனம், திருமஞ்சனம், பால், தயிர், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டுச் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

இக்கோயில் வளாகத்தில் உள்ள அருள்மிகு மதுரைவீரன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்றது. கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கையையொட்டி கோயில் பூசாரி மட்டும் பூஜைகளை செய்தார்.

Share via
Advertiment

More Stories

Ads