Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

கோடிகளை அள்ளித்தரும் ஐபிஎல் ஒளிபரப்பு உரிமை யாருக்கு..?

by Editor

விளையாட்டு
கோடிகளை அள்ளித்தரும் ஐபிஎல் ஒளிபரப்பு உரிமை யாருக்கு..?

ஐபிஎல் தொடரில் வீரர்கள் ஏலத்திற்கு அடுத்தபடியாக பெரிதும் எதிர்பார்க்கப்படுவது ஒளிபரப்பு உரிமம் தான். இடையிடையே அள்ளி அள்ளி கொட்டும் விளம்பரங்களால் அள்ளிக்கொடுக்கும் பல ஆயிரம் கோடிவருமானம் தரும் விஷயம்தான் தற்போதைய பரப்பரப்பாக உள்ளது.இதுவரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஒளிபரப்பு உரிமத்தை வைத்திருந்த நிலையில் அது இந்தாண்டுடன் முடிவுக்கு வருகிறது.

 2023-27ம் ஆண்டுவரை அடுத்த 5 ஆண்டுக்கான ஒளிபரப்பு உரிமத்தை பெற டிஸ்னி ஸ்டார் நெட்வொர்க், சோனி நெட்வொர்க், அம்பானியின் ரிலையன்ஸ் வயாகாம் 18, அமேசான் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.இந்த முறை ஒளிபரப்பு உரிமம் 40ஆயிரம் முதல் 45ஆயிரம்கோடி வரை தொட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Share via
Advertiment
Ads