Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

கோவில்பட்டி புற்று கோவிலில் பாதயாத்திரை முருக பக்தர்கள் சஷ்டி சிறப்புப் பூஜை

by Editor

ஆன்மீகம்
கோவில்பட்டி புற்று கோவிலில் பாதயாத்திரை முருக பக்தர்கள்  சஷ்டி சிறப்புப் பூஜை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள்  புற்றுக்கோவிலில் சஷ்டி  சிறப்புப் பூஜை நடைபெற்றது.

 இதனையொட்டி காலை 5.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு கோடிசக்தி விநாயகர், வள்ளி தேவசேனா சமேத கல்யாண முருகன், சஷ்டி சிறப்புப் பூஜை சங்கரலிங்க சுவாமி,  சங்கரேஸ்வரி அம்மனுக்கு  மஞ்சள், பால், தேன், விபுதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார திபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணிய அய்யார் செய்து வைத்தார்.

இவ்விழாவில்  திருச்செந்தூர் பாத யாத்திரை குழு முருக பக்தர்கள் மற்றும் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு முககவசம் அணிந்து சமூக இடைவெளி கடைப்பிடித்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதமாக வழங்கப்பட்டது.
 

Share via
Advertiment

More Stories

Ads