Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

நிலகிரிமாவட்டத்தில் பனிசீசன் துவக்கம்.மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

by Editor

சுற்றுலா
நிலகிரிமாவட்டத்தில் பனிசீசன் துவக்கம்.மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை பனிசீசன் காலமாகும் .தற்போது பனி சீசன் ஊட்டியில் தொடங்கியிருக்கிறது..மேலும் பனி  அதிகம் காணப்படும். கடந்த மாதம் பெய்த தொடர் மழை காரணமாக இந்த முறை பனிப்பொழிவு தாமதமாக துவங்கியுள்ளது. 

ஊட்டியில் காலை குறைந்தபட்ச வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸ் வரை காணப்படுகிறது, மேலும் கடும் பனி பொழிவின் காரணமாக ஆட்டோக்கள் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களின் மீது உறைப் பனி சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் வாகனங்களில் டீசல் உறைவதால் காலையில் வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக  வாகன ஓட்டிகள் தெரிவித்தனர். குறிப்பாக பனியின் தாக்கம் வழக்கத்தைவிட அதிகரித்துள்ளதால் காய்கறி தோட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் , மற்றும் தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள்,வாகன ஓட்டுனர்கள் உள்ளிட்ட தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப் பட்டுள்ளது.கடும் பனிப்பொழிவு காரணமாக பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள்  சாலை ஓரங்களில் தீ மூட்டி குளிர்காயும் சூழல் ஏற்பட்டுள்ளது
 

Share via
Advertiment
Ads