Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ஏர் டாக்ஸி சேவையை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

by Admin

சுற்றுலா
ஏர் டாக்ஸி சேவையை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

டெல்லியில் 2026 ஆம் ஆண்டு வாக்கில் மின்சார ஏர் டாக்ஸி சேவையை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது .இண்டிகோ விமான நிலையத்தின் தாய் நிறுவனமான இன்டர் ப்ரோ என்டர்பிரைசஸ் அமெரிக்காவின் ஆச்சர் ஏவியன் நிறுவனத்துடன் இணைந்து இந்த சேவையை வழங்க உள்ளது. டெல்லியின் கன்னாட் பிளேஸ் முதல் ஹரியானாவின் குரு கிராம் வரையிலான பயணத்தை வெறும் ஏழு நிமிடங்களில் கலக்க முடியும் ..சாலை வழியாக செல்ல தற்போது சுமார் 60 முதல் 90 நிமிடங்கள் வரை ஆகிறது ..ஒரு பயணத்திற்கு ஒருவருக்கு 2000 முதல் 3000 வரை கட்டணம் வசூலிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. .இது செங்குத்தாக எழுப்பி தரையிறங்கும் எலக்ட்ரிக் எலக்ட்ரிக்கல் டேக் ஆஃப் ஆண்டு லேண்டிங் வகை விமானம் ஆகும் ..இதில், ஒரு விமானி மற்றும் 4 பயணிகள் பயணிக்க முடியும் .டெல்லியை தொடர்ந்து மும்பை மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களிலும் இந்த சேவையை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது .மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் இதற்கான சோதனை ஓட்டங்களை 2026 இல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது .

Share via
Advertiment
Ads