Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

உயிருக்கு போராடிய குரங்கை காப்பாற்றிய கார் ஓட்டுநர்.

by Editor

லைப் ஸ்டைல்
உயிருக்கு போராடிய குரங்கை காப்பாற்றிய  கார் ஓட்டுநர்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா ஒதியம் சமத்துவபுரம் பகுதிக்கு கடந்த 9ம் தேதி குரங்கு குட்டி ஒன்று சுற்றித்திரிந்தது. அந்த குரங்கை தெரு நாய்கள் துரத்தி கடித்ததில் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் ஏற்பட்டு உயிருக்கு போராடியது.

இதனை அந்த வழியாக வந்த அதே  பகுதியை சேர்ந்தகார் ஓட்டுனரான  பிரபு கண்டு அதிர்ச்சியடைந்தார், குரங்கை காப்பாற்றும் முயற்சியில் உடனடியாக ஈடுபட்டார். மனிதனுக்கு அளிக்கப்படும் முதலுதவி சிகிச்சை போல், குரங்கின் நெஞ்சில் கை வைத்து அழுத்தியும், குரங்கின் வாயோடு, தனது வாயை வைத்து தன்னுடைய மூச்சுக்காற்றை செலுத்தியும் முதலுதவி செய்தார். 

இதையடுத்து உடனடியாக அவர் குரங்கை, தனது இருசக்கரவாகனத்தில்  வைத்து பெரம்பலூர் அரசு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.அங்கு அந்த  குரங்கிற்குமருத்துவர்கள்  சிகிச்சை அளித்து காப்பாற்றினர். இதையடுத்து அந்த குரங்கு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் உயிருக்கு போராடிய குரங்கிற்கு டிரைவர் பிரபு முதலுதவி அளிக்கும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. உயிருக்கு போராடிய குரங்குக்கு முதலுதவி செய்த பிரபுவை மக்கள்  பாராட்டி வருகின்றனர்.

Share via
Advertiment
Ads