Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

யு -விசா என்பது அமெரிக்காவில் சில குறிப்பிட்ட குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு விசா ஆகும்.

by Admin

லைப் ஸ்டைல்
யு -விசா என்பது அமெரிக்காவில் சில குறிப்பிட்ட குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு விசா ஆகும்.

யு -விசா என்பது அமெரிக்காவில் சில குறிப்பிட்ட குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு விசா ஆகும். ஏதாவது ஒரு குற்றச் செயலால் உடல் ரீதியாகவோ மன ரீதியாகவோ கடுமையான பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு அல்லது குற்றவாளிகளை பிடிக்க அல்லது அவர்கள் மீது விசாரணையில் காவல்துறைக்கு உதவ வருபவர்களுக்கு இந்த விசா வழங்கப்படுகிறது. இந்த விசா வழங்க வேண்டும் எனில், அமெரிக்காவில் நடந்த அல்லது அமெரிக்க சட்டங்களை மீறிய குறிப்பிட்ட குற்றங்களால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கு வழங்கப்படுகிறது.குற்றத்தால் கடுமையான உடல் அல்லது மன ரீதியான பாதிப்பு ஏற்பட்டிருக்க வேண்டும். விசாரணை அல்லது தண்டனை வழங்க காவல்துறைக்கு தேவையான தகவல்களை வழங்கியிருக்க வேண்டும் அல்லது உதவும் முன்வர வேண்டும் . காவல்துறையிடம் இருந்து முறையாக பரிந்துரைச் சான்றிதழ் (i-918 s b)பெற்றிருக்க வேண்டும். குடும்ப வன்முறை, பாலியல் வன்கொடுமை, மனிதக் கடத்தல் ஆள் கடத்தல், கொலை சித்திரவதை மற்றும் சிறைபிடித்தல் போன்ற பல பெரிய குற்றங்கள் இதில் அடங்கும். அமெரிக்காவில் ,இந்த விசா பெறுபவர்கள் நான்கு ஆண்டுகள் வரை சட்டபூர்வமாக தங்கலாம் .வேலை செய்ய அனுமதி பெறலாம். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தகுதி உள்ளவர்கள் நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம். (அதாவது கிரீன் கார்டு பெற....) ஓர் ஆண்டில் அதிகபட்சமாக 10,000 யூ விசாக்கள் வழங்கப்படுகின்றன. இந்த விசாக்களை பெறுவதற்கு ஒரு சில ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டியது இருக்கும்.

Share via
Advertiment
Ads