Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

கூந்தலுக்கு நெய் அளிக்கும் நன்மைகள்

by Editor

லைப் ஸ்டைல்
கூந்தலுக்கு நெய் அளிக்கும் நன்மைகள்

 


உங்களுக்கு சாதத்தில் நெய் ஊற்றி சாப்பிடுவது என்றால் மிகவும் பிடிக்குமா..? அப்போ நிச்சயம் அதன் நன்மைகளையும் தெரிந்துகொள்ளுங்கள். கூந்தலில் நெய் எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.
நெய்யை லேசாக சூடு செய்து, தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்துக்கொள்ளுங்கள். கூந்தலை கூடுதல் மிருதுவாகவும், பொலிவாகவும் வைக்க உதவும். கூந்தல் நன்றாக வளரும்.  கூந்தலுக்கு நல்ல கண்டிஷன் செய்ததுபோல இருக்கும். கூந்தலை வறண்டு போகாமல், ஆரோக்கியமாக ஈரப்பதமாக வைத்துக்கொள்ளும்,.

1. பொடுகுத் தொல்லை : நெய் மற்றும் பாதாம் எண்ணெய் இரண்டையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்தக் கலவையை தலையில் நன்றாக தேய்த்துக் கொண்டு ஊறவைக்கவும். பின்னர் கழுவி விடுங்கள்.

2. கூந்தல் நிறம் குறைந்திருந்தால் : எலுமிச்சை சாறுடன் நெய் சேர்த்து கூந்தலில் தேய்த்துக்கொள்ளுங்கள். பத்து நிமிடம் ஊறியதும் குளித்து விடுங்கள். உங்கள் கூந்தலில் இயற்கையான பொலிவைப் பார்க்கலாம்.

3. இளநரை மற்றும்  சொரியாசிஸ் : இளநரை மற்றும் சொரியாசிஸ் உள்ளவர்கள், மருத்துவ குணம் கொண்ட நெய் தடவி மசாஜ் செய்து வந்தால், நல்ல தீர்வு கிடைக்கும்.

4. கூந்தல் அடர்திக்கு : நெய்யோடு, நெல்லிக்காய் ஜூஸ் மற்றும் வெங்காயச்சாறு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். தலையில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்யுங்கள். விரைவில் உங்கள் கூந்தல் உதிர்வது குறைந்து நன்றாக வளரும்.

Share via
Advertiment
Ads