Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

காஞ்சீபுரம் அருகே தாமல் ஏரியில் பொதுமக்கள் ஆனந்தக் குளியல்

by Editor

சுற்றுலா
காஞ்சீபுரம் அருகே  தாமல் ஏரியில் பொதுமக்கள் ஆனந்தக் குளியல்

 

காஞ்சீபுரம் அருகே தாமல் ஏரி கலங்கல் வழியாக வெளியேறும் நீரில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குளித்து மகிழ்ந்தனர்.ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கலவகுண்டா அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் பொன்னையாற்றின் வழியாக பாலாற்றில் கலந்து வருகிறது


இதன் காரணமாக காஞ்சீபுரம் மாவட்டத்தில் பெரிய ஏரிகளின் ஒன்றான தாமல் ஏரி 4 ஆண்டுகளுக்கு பிறகு முழுவதுமாக நிரம்பி வழிகிறது. 500 ஏக்கர் பரப்பளவு கொண்ட தாமல் ஏரி 206 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டுள்ளது. இந்த ஏரியில் இருந்து தற்போது சுமார் 400 கன அடி தண்ணீர் வெளியேறி வருகிறது. தொடர்ந்து 20 நாட்கள் உபரி நீர் வெளியேறும் என காஞ்சீபுரம் பாசன பிரிவு இளம்பொறியாளர் மார்கண்டன் தெரிவித்தார்.


நேற்று ஞாயிற்றுகிழமை விடுமுறை தினம் என்பதால் தாமல் கிராம மக்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கார், இருசக்கர வாகனங்களின் மூலம் தாமல் ஏரிக்கு வந்து கலங்கல் வழியாக வெளியேறும் நீரில் குடும்பத்துடன் ஆனந்தமாக குளித்தனர்.


4 ஆண்டுகளுக்கு பிறகு தாமல் ஏரி முழுவதும் நிரம்பி உபரி நீர் வெளியேறுவதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி யடைந்துள்ளனர்.

Share via
Advertiment
Ads