Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

கொடைக்கான‌ல் ஓராவி அருவியில் குளிக்க‌ சென்ற‌ ப‌ய‌ணி உயிரிழ‌ப்பு

by Editor

சுற்றுலா
கொடைக்கான‌ல் ஓராவி அருவியில் குளிக்க‌ சென்ற‌ ப‌ய‌ணி உயிரிழ‌ப்பு

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை ஆகிய நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும். கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் முக்கிய சுற்றுலா இடங்களான வ‌னத்துறை கட்டுப்பாட்டிலுள்ள தூண்பாறை குணா குகை உள்ளிட்ட பல்வேறு இடங்களை கண்டு ரசிப்பது வழக்கம். தொடர்ந்து கொடைக்கானலில் அவ்வப்போது கனமழை பெய்து வரும் நிலையில் அருவிகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீரானது பெருக்கெடுத்து ஓடி வருகிறது .

இதனைக் கண்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து வந்தனர். தொடர்ந்து கொடைக்கானல் அருகே பாரதி அண்ணா நகர் பகுதியில் அமைந்துள்ள ஓராவி அருவியில் குளிக்கச் சென்ற ராமநாதபுரத்தை சேர்ந்த சுற்றுலா பயணி அருண்குமார் 24 தவறி விழுந்துள்ளார். இதில் தண்ணீரில் சிக்கி உயிரிழந்துள்ளார். தொடர்ந்து அவருடன் வந்த சக பயணிகள் கொடைக்கானல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் தற்போது அவரின் உடலைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அனுமதியின்றி பல்வேறு இடங்களில் சுற்றுலா பயணிகள் சென்று அருவிகளில் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் வனப்பகுதிக்குள் சென்று வருவது தொடர்ந்து வருகிறது. இதனைக் காவல்துறை மற்றும் வனத்துறை கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Share via
Advertiment
Ads