Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

நீலகிரி சேவா கேந்திரம் துாய்மை பணி

by Editor

சுற்றுலா
நீலகிரி சேவா கேந்திரம் துாய்மை பணி

கோத்தகிரி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு மருத்துவமனையில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, ஆர்.எஸ்.எஸ்., நீலகிரி சேவா கேந்திரம் சார்பில், துாய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.ஆர்.எஸ்.எஸ்., வட்டார தலைவர் ராஜேஷ் சந்தர் தலைமை வகித்தார். சேவா பிரிவு நிர்வாகி ஹரிசுதன், வக்கீல்கள் சிவக்குமார் மற்றும் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோத்தகிரி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு மருத்துவமனை, நெடுகுளா மற்றும் கக்குச்சி பகுதிகளில், முட்புதர்களை அகற்றி, குழிகளை மூடி சமன்செய்து துாய்மை பணியில் ஈடுபட்டனர்.இதில், ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகி நேரு, ரோட்டரி சங்க நிர்வாகிகள் ரவிக்குமார், கிஷோர் உட்பட, சேவா கேந்திரா உறுப்பினர்கள், 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Share via
Advertiment
Ads