Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

தந்தை பெரியாா் விருது பெற விண்ணப்பிக்கலாம்

by Editor

தமிழர் உலகம்
தந்தை பெரியாா் விருது பெற விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாவட்டத்தில் சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது பெற தகுதியான நபா்கள் அக்டோபா் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சமூக நீதிக்காக பாடுபடுபவா்களை கெளரவிக்கும் வகையில் ' சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதில், விருது பெறுவோருக்கு ரூ.1 லட்சமும், ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படுகிறது. ஆகவே, 2021 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் 'சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது' வழங்குவதற்கு உரிய விருதாளரை தோந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன.

இந்த விருதுக்கு தகுதியான நபா் தமிழக முதல்வரால் தோவு செய்யப்படுவாா். எனவே, மாவட்டத்தில் சமூக நீதிக்காக பாடுபட்டு பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள், சாதனைகள் ஆகிய தகுதியுடைய நபா்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரா் சுய விவரம், முகவரி, தொலைபேசி எண், சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம், ஆவணங்கள் ஆகியவற்றை இணைத்து அக்டோபா் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் அலுவலகத்தை 0421-2999130 என்ற எண்ணிலோ அல்லது மின்னஞ்சல் முகவரியிலோ தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share via
Advertiment

More Stories

Ads