Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

முத்தமிழ் பேரவை அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற முத்தமிழ் பேரவையின் இசை விழாவில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்

by Admin

தமிழர் உலகம்
முத்தமிழ் பேரவை அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற முத்தமிழ் பேரவையின் இசை விழாவில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்

சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் திருவாவடுதுறை டி.என். ராஜரத்தினம் கலை அரங்கில் முத்தமிழ் பேரவை அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற முத்தமிழ் பேரவையின் இசை விழாவில் ,தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு கலைஞர்களுக்கு விருது வழங்கி உரையாற்றினார். அவ்விழாவில், ஒவ்வொரு ஆண்டும் முத்தமிழ் பேரவை விருது வழங்கும் விழாவை நான் தவறவிடவே மாட்டேன் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறேன் நம்முடைய மதிப்பிற்குரிய நாசர் அவர்கள் கூட குறிப்பிட்டு சொன்னார். அடுத்த ஆண்டு முதல்வராக வந்து நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்று சொன்னார். நான் அடக்கத்தோடு சொல்கிறேன் முதல்வராக வருவேன் இல்லையோ முதல் நபராக நான் நிச்சயம் வருவேன். தலைவர் கலைஞர் அவர்களும் அப்படித்தான் அவர் உருவாக்கிய வழக்கத்தை நானும் தொடர்ந்து கடைபிடித்து வருகிறேன் என்று நான் எண்ணுகிறேன். அதுவும் இந்த நிகழ்ச்சியை விடாமல் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்க கூடிய நம்முடைய இயக்குனர் அமிர்தம் அவர்கள் அழைத்தால் நான் மறுக்க முடியுமா... சிறு வயதிலிருந்து என்னுடைய வளர்ச்சியை படிப்படியாக பார்த்தவர் மட்டுமல்ல அடித்து திருத்தியவர் .நான் அடிக்கடி அடித்து அடித்து என்று சொல்கிறேனே ,அடிக்கடி அடிக்கவில்லை .ஒரு முறை தான் அடித்திருக்கிறார் .என்னை வளர்த்து எடுத்து திருத்தக் கூடியவர்களில் ஒரு முக்கியமானவராக நம்முடைய அமிர்தம் அவர்கள் விளங்கிக் கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு கோபாலபுரத்தின் தலைப்புள்ளையாக இருந்து எங்களை எல்லாம் அவர் வழிநடத்திக் கொண்டிருக்கின்றார். இந்த முத்தமிழ் பேரவை என்பது நம்முடைய முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்ட அமைப்பு. அப்படிப்பட்ட இந்த அமைப்பு நடத்தக்கூடிய இந்த விழாவிற்கு நான் வருவது உள்ளபடியே எனக்கு பெருமை தான் அந்த அமைப்பையும் தொடங்குகின்ற போது சிறப்பாக இருக்கும் .எழுச்சியோடு நடைபெறும் .பெருமையாக இருக்கும். தொடக்க விழா முடிந்ததும் முடிந்து போன அமைப்புகள் எல்லாம் நாட்டில் உண்டு. ஆனால் தொடங்கிய காலத்தில் இருந்து இந்நாள் வரையில் தொடர்ந்து 50 ஆண்டுகளை கண்டு இன்றைக்கு51 ஆம் ஆண்டு விழாவை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதே உற்சாகத்துடன் அதே ஆக்டிவாக அந்த அமைப்பு இருப்பதற்கு முழு காரணம் நம்முடைய இயக்குனர் அமிர்தம் அவர்கள் என்பதை இங்கு நான் பெருமையோடு குறிப்பிட விரும்புகிறேன். இந்த விழாவில், கலைஞர் விருது திரைப்பட நடிகர் நாசருக்கு வழங்கப்பட்டது. ராஜரத்தினம் விருது வடுவூர் எஸ் என் ஆர் கிருஷ்ணமூர்த்திக்கும் இயல் செல்வம் விருது புலவர் சண்முக வடிவேலுக்கும் இசை செல்வம் விருது காயத்ரி வெங்கட்ராமனுக்கும் நாட்டிய செல்வம் விருது அனிதா குகாவுக்கும் நாதஸ்வர செல்வம் விருது திரு மெய்ஞானம் சகோதரர்மீனாட்சிசுந்தரம் இருவருக்கும் வழங்கப்பட்டது. தவில் செல்வம் விருது நாங்கூர் என் கே செல்வகணபதிக்கும் மிருதங்க செல்வம் விருது தஞ்சாவூர் கே முருக பூபதிக்கும் வழங்கப்பட்டது.

 

Share via
Advertiment

More Stories

Ads