Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

முக்கிய விமான நிலையங்களில் பயணிகளுக்கான சுகாதார பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது.

by Admin

ஹெல்த் ஸ்பெஷல்
முக்கிய விமான நிலையங்களில் பயணிகளுக்கான சுகாதார பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வரும் எபோலா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சென்னை மற்றும் பெங்களூர் உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களில் பயணிகளுக்கான சுகாதார பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம்  எபோலா வைரஸை பொது சுகாதார அவசர நிலையாக அறிவித்ததை அடுத்து மத்திய சுகாதாரத்துறை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காங்கோ ,உகாண்டா, தெற்கு சூடான் ஆகிய நாடுகளில் இருந்து வரும் அல்லது அந்த நாடுகள் வழியாக பயணம் செய்து வரும் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள், சம்பந்தப்பட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகள் தங்கள் பயண வரலாறு மற்றும் உடல்நிலை குறித்த சுய பிரகடன வடிவத்தை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது ,காய்ச்சல் கடுமையான சோர்வு, தசை வலி , வயிற்றுப்போக்கு மற்றும் விவரிக்க முடியாத ரத்தப்போக்கு போன்ற அறிகுறிகள் உள்ளதா என வெப்பநிலை பரிசோதனை மூலம் கண்டறியப்படுகிறது.சர்வதேச விமானங்களில்எபோலா வைரஸ்  அறிகுறிகள் மற்றும் அது குறித்த விழிப்புணர்வு அறிவிப்புகளை வெளியிட விமான நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விமான பணியாளர்கள் முககவசங்கள், கையுறைகள் மற்றும் பி.பி.இ கட்களை போதிய அளவில் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. விமான நிலைய வருகை முனையங்களிலேயே சந்தேகத்திற்குரிய பயணிகளை தற்காலிகமாக தனிமைப்படுத்த பிரத்யோக அறைகள் அமைக்கப்பட்டுள்ளனர். அறிகுறி உள்ள பயணிகள் உடனடியாக அரசு பொது மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்கப்படுகிறார்கள்.

Share via
Advertiment

More Stories

Ads