Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

வெயில் கடுமையாக இருப்பதால் உடலில் ஏற்படும் நீர் சத்து குறைபாட்டை தடுக்க ஓஆர்எஸ் கரைசல்- சுகாதாரத் துறை

by Admin

ஹெல்த் ஸ்பெஷல்
வெயில் கடுமையாக இருப்பதால் உடலில் ஏற்படும் நீர் சத்து குறைபாட்டை தடுக்க  ஓஆர்எஸ் கரைசல்- சுகாதாரத் துறை

கோடை வெயில் கடுமையாக இருப்பதால் உடலில் ஏற்படும் நீர் சத்து குறைபாட்டை தடுக்க தமிழக சுகாதாரத் துறை அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓஆர்எஸ் எனப்படும் உயிர்காக்கும் கரைசல் தடையின்றி கிடைக்க வழி வகை செய்துள்ளது. வெயிலின் கொடுமையில் இருந்து விடுபட வேண்டுமெனில் பகல் 12.00 மணியிலிருந்து மூன்று மணி வரை தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும். அதிக அளவு தண்ணீர் பருக வேண்டும். இளநீர் மோர் மற்றும் பழச்சாறுகளை அதிக அளவில் அருந்த வேண்டும். வெயில் நேரடியாக உச்சந்தலையை தாக்காமல் இருக்குமாறு தொப்பி அல்லது குடையை மூலம் வெயிலை கட்டுப்படுத்த வேண்டும். கடந்த காலங்களில் வெயிலின் கொடுமையால் மூத்த வயதுடையோர் உயிரிழந்து உள்ளனர். அரசு மருத்துவமனைகளில் இப்பொழுது வெயில் தாக்கத்தினால் உருவாகும் நோயை குணப்படுத்த தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன

..ஓ ஆர் எஸ் (ஓரல் ரீ ஹைட்ரேஷன் சொல்யூஷன்) என்பது வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் வெப்பத்தினால் ஏற்படும் நீர் இழப்பை சரி செய்ய பயன்படுத்தும் உயிர் காக்கும் கரைசல் ஆகும். இது உடலில் இழந்த நீர்ச்சத்து உப்புக்கள் (சோடியம் ,பொட்டாசியம்) மற்றும் குளுக்கோசை விரைந்து உடலின் தேவைக்கு ஏற்ப வழங்கி இயல்பு நிலைக்கு கொண்டு வர செய்கிறது. கரைசல் உடலில் ஏற்படும் நீர்ச்சத்து குறைபாட்டை தடுத்து உயிர் இழப்பை 93 விழுக்காடு குறைக்க பயன்படுகிறது. அதிகமான வெயிலின் காரணமாக உடலில் இருந்து வெளியேறும் வியர்வை சோர்வு மற்றும் நீர் இழப்பை இதை தடுத்து நிறுத்துகிறது. உடலில் இருந்து இழந்த எலெக்ட்ரோலைட்டுக்களை மாற்றுவதன் மூலம் உடலுக்கு புத்துயிர் வழங்குகிறது. மருந்து கடைகளில் ஓ ஆர் எஸ் பாக்கெட்டுகள் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி பருகுவதன் மூலம் இழந்த சக்தியை பெற முடியும்.

Share via
Advertiment

More Stories

Ads