Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைக்க தேவையான தீர்வுகளை கண்டறிய உத்திரப்பிரதேசகுழுவினர் சென்னை வந்துள்ளனர்.

by Admin

ஹெல்த் ஸ்பெஷல்
மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைக்க தேவையான தீர்வுகளை கண்டறிய உத்திரப்பிரதேசகுழுவினர் சென்னை வந்துள்ளனர்.

தமிழ்நாட்டின் பொது சுகாதார மாதிரியை பயின்ற மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைக்க தேவையான தீர்வுகளை கண்டறிய உத்திரப்பிரதேச மாநில உருமாற்ற ஆணையத்தின் உயர்மட்ட குழுவினர் சென்னை வந்துள்ளனர். தமிழ்நாட்டின் மகப்பேறு இறப்பு விகிதம் ஒரு லட்சம் பிறப்புகளுக்கு 35 முதல் 40 என்ற அளவில் மிக குறைவாக உள்ளது ஆனால் உத்தரபிரதேசத்தில் இது 140 ஆக உள்ளது இந்த இடைவெளியை குறைப்பதை இக்குழுவின் முக்கிய நோக்கம் ஆகும் இக்குழுவினர் சென்னையில் உள்ள தேசிய நல்வாழ்வு குழும அலுவலகத்தில் தமிழக சுகாதாரத் துறை உயர் அதிகாரியுடன் விரிவான ஆலோசனை நடத்தினர் .ஆலோசனை தொடர்ந்து மகப்பேறு இறப்பு விகிதத்தை வெற்றிகரமாக குறைத்துள்ள விருதுநகர் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் இக்குழுவினர் நேரடி கள ஆய்வுகளை மேற்கொண்டனர். குறிப்பாக ,விருதுநகர் மாவட்டத்தில் 2023- 24 காலகட்டத்தில் பூஜ்ஜிய மகப்பேறு இறப்பை பதிவு செய்து சாதனை படைத்துள்ளது டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 18,000 நிதி மற்றும் ஊட்டச்சத்து பெட்டகங்கள் தாய்மார்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதை அவர்கள் கேட்டு அறிந்தனர். 24 மணி நேர அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ,அவசரகால மகப்பேறு சிகிச்சை மையங்கள் மற்றும் ரத்த சோகை உள்ள கற்பகாலத் தனிப்பட்ட முறையில் கண்காணிக்கும் முறைகள் குறித்தும் ஆய்வு செய்தனர். 2004 -ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கும் கட்டாய மகப்பேறு இறப்பு தணிக்கை முறை இறப்பிற்கான காரணங்களை கண்டறிந்து தடுப்பதில் எவ்வாறு உதவுகிறது என்பதை குறித்து கேட்டு அறிந்தனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2030-ம் ஆண்டிற்குள் மகப்பேறு இறப்பு விகிதத்தை 70 ஆக குறைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share via
Advertiment

More Stories

Ads