Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

நுரையீரலுக்கு தீங்கு

by Editor

ஹெல்த் ஸ்பெஷல்
நுரையீரலுக்கு தீங்கு

உடலின் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் உணவு வகைகளை தெரிந்துக் கொண்டு,  தவிர்த்தால் ஆரோக்கியம் மேம்படும்.நுரையீரலுக்கு நேரடி சேதத்தை ஏற்படுத்தும் உணவுகளை  அளவுடன் உட்கொள்வது பலன் தரும்.
நுரையீரல் குறுகுவதால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது.  சுவாசத்தில்  நுரையீரல் முக்கிய பங்கு வகிக்கிறது. நுரையீரல் ஆக்ஸிஜனை  வடிகட்டப்பட்ட பிறகுதான், ஆக்சிஜன் முழு உடலையும் சென்றடைகிறது.  உயிர்காற்றை வழங்கும் பணியை மேற்கொள்ளும் நுரையிரலை ஆரோக்கியமாக வைத்திருக்க ஆரோக்கியமான உணவு அவசியம். நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் உணவுகள்நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க, உணவில் உப்பைக் குறைத்துக் கொண்டால் நல்லது.
 நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க  செயற்கையான குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும். இனிப்பு சம்பந்தப்பட்ட உணவுகளை அதிகமாக சாப்பிடும் பொழுது   மூச்சுக்குழாயில் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உண்டு. இறைச்சியை நீண்ட நாள் பாதுகாக்க நைட்ரைட் என்ற வேதி பொருள் கலக்கப்படுவதால் . அது, நுரையீரலில் வீக்கம் மற்றும் பதற்றத்தை ஏற்படுகிறது. பால், தயிர் மற்றும் பாலாடைக்கட்டி போன்ற பால் பொருட்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும், அதிகமாக உட்கொண்டால்,  தீங்கு விளைவிக்கும். மது உடல் ஆரோக்கியத்தை கெடுப்பதோடு ஆஸ்துமாவையும் உருவாக்குகிறது. .

Share via
Advertiment

More Stories

Ads