Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

உற்சாகத்தின் மறுபெயர் கொம்புச்சா டீ  

by Editor

லைப் ஸ்டைல்
உற்சாகத்தின் மறுபெயர் கொம்புச்சா டீ  

 

 கொம்புச்சா டீ  இதனை  பருகுவது உணவுக்கு முன்பு இருக்கக்கூடிய ரத்த சர்க்கரை அளவுகளை ஒரு டெசிலிட்டருக்கு164 -ல் இருந்து 116 மில்லிகிராமாக குறைக்கக்கூடிய தன்மை கொண்டதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த டீயில் பல ஆரோக்கிய நன்மைகள் இருக்கலாம் என்று ஆராய்ச்சி கூறுகிறது. செரிமான பிரச்சனைகளை குறைக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. தோல் சுருக்கங்கள் மற்றும் தொய்வு போன்ற வயதான அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது. எடை குறைக்க உதவுகிறது. உடலில் இருந்து நச்சுகளை நீக்குகிறது.என ஆய்வுகள் தெரிவிக்கின்றன என தகவல்கள் வெளியாகியுள்ளது.

பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும் இனிப்பான கருப்பு டீயை கொண்டு தயாரிக்கப்பட்ட குமிழ் உண்டாக்குகிற மற்றும் புளிக்கவைக்கப்பட்ட ஒரு பானமாகும். உடலை சுத்தம் செய்யவும், பல்வேறு உடல் சார்ந்த பிரச்னைகளை விலகிச் ஓடச் செய்யும் வகையில் இந்த பானம் நீண்ட காலமாக உணவோடு சேர்த்து பரிமாறப்படுகிறது. இல்லை என்றால் தூங்குவதற்கு முன்பு குடிக்கும் பழக்கம் உள்ளது. இயற்கையாக புளிக்கவைக்கப்பட்ட மற்றும் கார்பனேட் கொண்ட இந்த பானம் நம் உடலுக்கு பல வகைகளில் நன்மை அளிக்கிறது.

Share via
Advertiment
Ads