Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

பஞ்சாப் அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

by Admin

விளையாட்டு
 பஞ்சாப் அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் குஜராத் ஐட்டம்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. களம் இறங்கிய குஜராத் அணி 20 ஓவரில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 199 ரன்களை எடுத்தது. அடுத்து களம் புகுந்த பஞ்சாப் அணி 200 ரங்களை இலக்காக கொண்டு களம் இறங்கி ஆடியது. மிகவும் விறுவிறுப்பான ஒரு ஆட்டமாக இந்த ஆட்டம் இருந்தது .அனைத்து முன்னணி ஆட்டக்காரர்களும் அவுட்டாகி வெளியேறிய நிலையில் பஞ்சாப் அணி தோல்வி அடைந்து விடும் என்கிற மனோநிலை கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் உருவாகிக் கொண்டிருந்த நேரத்தில் திடுமென்று கிரிக்கெட் தட்பவெட்ப நிலை மாறியது..  ,பஞ்சாப் அணி ஆடி.... ஏழு விக்கெட் களை இழந்து 19 புள்ளி 5 ஓவரில் 200 ரன்களை எடுத்து மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Share via
Advertiment

More Stories

Ads