Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி.-சேப்பாக்கம் ஸ்டேடியம் வரை இலவசமாக பேருந்துகளில் வந்து செல்லலாம்.

by Admin

விளையாட்டு
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி.-சேப்பாக்கம் ஸ்டேடியம் வரை இலவசமாக பேருந்துகளில் வந்து செல்லலாம்.

 நாளை மாலை ஆறு முப்பது மணி அளவில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்குகிறது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி.

இப்போட்டியை காண வருகிற ரசிகர்கள், சென்னை மாநகரப் பேருந்தில் போட்டி ஆரம்பிப்பதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பாக சென்னையைச் சுற்றியுள்ள அனைத்து பகுதியில் இருந்தும் சேப்பாக்கம் ஸ்டேடியம் வரை  தாங்கள் வைத்திருக்கும் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டை காண்பித்தாலே போதும் இலவசமாக பேருந்துகளில் பயணிக்கலாம் என்றும் அவரவர் பகுதிக்கு இலவசமாக திரும்பியும் செல்லலாம் என்றும் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது..

 நாளை, முதலாவது போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும் இடையே நடக்க இருக்கின்றது.. போட்டி எட்டு மணிக்கு தொடங்கும் என்றும் அதற்கு முன் தொடக்க விழா நிகழ்வு ஆறு முப்பது மணி அளவில் ஆரம்பிக்க இருக்கின்றது..

 

Share via
Advertiment

More Stories

Ads