Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ஜல்லிக்கட்டு என்கிற வீர விளையாட்டு தமிழர்களின் நெடும் வரலாற்றில்.....

by Admin

தமிழர் உலகம்
 ஜல்லிக்கட்டு என்கிற வீர விளையாட்டு தமிழர்களின் நெடும் வரலாற்றில்.....

தமிழர்களின் வீர விளையாட்டாக கருதப்படும் ஜல்லிக்கட்டு போட்டி இந்த ஆண்டு முதலாவதாக தச்சன் குறிச்சியில் கோலாகலமாக தொடங்கப்பட்டது. வாடிவாசல் வழியே சீறிவரும் காளைகளை தினவெடுத்த தோள் கொண்ட காளையர்கள் எதிர்நோக்கி திமிலை இறுக பிடித்து காளையை சாய்த்து வெற்றி பெற்று பரிசுகளை பெரும் முனைப்போடு களத்தில் குதித்துள்ளனர்.

மஞ்சுவிரட்டு- ஜல்லிக்கட்டு என்கிற இந்த வீர விளையாட்டு தமிழர்களின் நெடும் வரலாற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை பெற்றது. போர் முனையில் எதிரி படைகளை வீழ்த்தி வெற்றி பெற்ற வீரர்கள் போர் இல்லாத காலங்களில் தங்களுடைய வீரத்தன்மையை என்றென்றும் நிலை பெற்றிருக்க வேண்டும் என்பதற்கான ஒரு போட்டியாகவும் பண்பாட்டு கூறுகளில் ஒன்றாக கருதப்படும் திருமணத்தில் முல்லை நிலத்தில் பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்கு இளைஞர்களின் திறனை கணக்கிடும் பொருட்டும்  இப்போட்டி நிகழ்த்தப்பட்டது கொல்லெறிந்து கோடு அஞ்சு வானை மறுமையிலும் புல்லாலே ஆயர் மகள் என்று இலக்கியம் சொல்லும். களத்தில் வெறிகொண்டு நிற்கும் காளையை அடக்குகிற இளைஞன் எவனோ அவனையே முல்லை நில பெண்கள் திருமணம் செய்து கொள்வார்கள் .அப்படி காளையை அடக்கின்ற ஆற்றல் இல்லாதவர்களை அவள் அடுத்த ஜென்மத்தில் கூட நினைத்துக் கூட பார்க்க மாட்டாள் என்பதுதான் இலக்கியம் வழியாக அன்றைய சமூக மக்களினுடைய பண்பாட்டுக் கூறுகளை நாம் பார்த்தோம். உத்தியோகம் புருஷ லட்சணம் என்பது இன்றைக்கு பேசப்படும் மொழியாக இருந்தாலும் அன்றைக்கு வீரம் தான் ஒரு இளைஞனுடைய புருஷ லட்சணமாக இருந்தது.. அதனுடைய தொடர்ச்சியாக -எச்சமாக இன்றைக்கு நம்முடைய பண்பாட்டு கூறுகளில் இந்த வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு முதன்மை இடத்தை பெற்றிருக்கிறது.

Share via
Advertiment

More Stories

Ads