Advertiment

ஒரு ரன் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

by Admin

விளையாட்டு
ஒரு ரன் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா அணியும் லக்னோ அணியும் மோதின. முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆட லக்னோ அணி வந்தது. பலகீனமான அணி என்று வர்ணிக்கப்பட்டு கொண்டிருக்கும் லக்னோ அணி எப்படியும் வெற்றி பெற்று விட வேண்டும் என்கிற முனைப்பில் 20 ஓவரில் 176 ரன்கள் 8 விக்கெட் இழப்பிற்கு எடுத்தது. களத்தில் இறங்கிய கொல்கத்தா அணி தம் சொந்த மைதானத்தில் வெற்றி பெற வேண்டும் என்கிற வெறியோடு விளையாடிய பொழுதிலும் கொல்கத்தா அணி 20 ஓவரில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் மட்டுமே பெற முடிந்தது. கடைசி மூன்று பந்துகளில் 19 ரன்கள் எடுக்க வேண்டிய சூழலில் ஒரு ரன் கிடைத்துவிட ரிங்கு சிங் ஒரு சிக்ஸும் ஒரு ஃபோரும் மீண்டும் ஒருசிக்ஸும் முயன்று எடுத்தும் கொல்கத்தா அணி ஒருரன்  வித்தியாசத்தில் லக்னோ அணியிடம் வெற்றி வாய்ப்பை இழந்தது. இவ்வெற்றியின் மூலம் லக்னோ அணி பிளே  ஆப்பிற்குள் நுழைந்தது.  நடந்த இரண்டு போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் லக்னோ அணியும் பிளே ஆஃப்க்குள் நூறு சதவீதம் நுழைந்தன.

Share via
Advertiment

More Stories

Ads