Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

மீனின் மருத்துவப் பயன்கள்... 

by Admin

ஹெல்த் ஸ்பெஷல்
மீனின் மருத்துவப் பயன்கள்... 

மீனின் மருத்துவப் பயன்கள்... 

மீன் சாப்பிட்டு வருவோருக்கு ஆஸ்துமா நோய் வராது. அதிலும் குழந்தைகளுக்கு மீன் கொடுத்து வந்தால், அவர்களுக்கு கண்டிப்பாக ஆஸ்துமா வராது.
மூளைக்கும், கண் பார்வைக்கும் மிகவும் பயனளிக்கிறது. மீனில் உள்ள "ஒமேகா 3" ஆசிட், மூளை சுறுசுறுப்பாக இயங்கவும், கண் பார்வையில் பாதிப்பு வராமலும் செய்கிறது.


பலவகை புற்றுநோயும் வராமல் தடுப்பதில், "ஒமேகா 3 " யின் பங்கு 70 சதவீதம் வரை உள்ளது. மீன் சாப்பிடும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் உட்பட எந்த வகை புற்றுநோயும் வராது.
கொழுப்பு அறவே இல்லாமல் இருப்பதால், இருதய பாதிப்பு வருவது என்ற கேள்விக்கே இடமில்லை. ரத்தம் கட்டுவது, ரத்தக்குழாயில் வீக்கம், வால்வு பிரச்னை போன்ற எதுவும் வராது. இருதயத்துக்கு மிகுந்த பாதுகாப்பை தருகிறது மீன்.
பெண்கள் கர்ப்பகாலத்தில் மீன் உண்ணுவதால் குறைப்பிரசவத்தை தவிர்க்கலாம். தாய்ப்பாலை அதிகரிக்கவும், தாயின் எலும்புகளுக்கு வலு சேர்க்கவும்கூட மீன் பயன்படுகிறது.


மீன்களில் காணப்படும் துத்தநாகம், செலினியம், பாஸ்பரஸ் போன்ற மணிச்சத்துக்கள் மூளை வளர்ச்சிக்கும், பொட்டாஷியம் இரத்த அழுத்தத்தை ஒரே சீராக வைத்திருப்பதற்கும், கால்சியம் வலுவான எலும்பு வளர்ச்சிக்கும், அயோடின், உடலின் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்தவும் துணை நிற்கின்றன.
சருமத்திற்க்கு பாதுகாப்பளித்து, இரத்தவோட்டத்தைத் தூண்டி செயல்படும் விட்டமின் E மீன்களில் தேவையான அளவு அடங்கியுள்ளது.

Share via
Advertiment

More Stories

Ads