Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

உடல் எடை குறைந்து ஸ்லிம் ஆக...

by Editor

ஹெல்த் ஸ்பெஷல்
உடல் எடை குறைந்து ஸ்லிம் ஆக...

இந்த தண்ணீரை மட்டும் குடிங்க….” உங்கள் எடை குறைந்து ஸ்லிம் ஆயிடுவீங்க”… எப்படி செய்வது..? வாங்க பார்க்கலாம்..!!

உடல் எடையை குறைக்க இந்த தண்ணீரை நீங்கள் தினசரி சாப்பிட்டு வந்தாலே போதும் விரைவில் எடையை குறைக்க முடியும்.உடல் எடை என்பது தற்போது பெரும் பிரச்சனையாக மாறி வருகின்றது. இந்த உடல் எடையின் காரணமாக பலர் அவதிப்படுகிறார்கள்.

உடல் எடையால் பக்கவிளைவுகளும் நமக்கு வரும். உடல் எடையை குறைப்பதற்கு முறையான சிகிச்சைகளையும், டயட் களையும் பின்பற்ற வேண்டும். ஆனால் பலர் மிகவும் அதிக அளவில் டயட் என்ற பெயரில் உணவே உண்ணாமல் இருப்பதால் பல பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள். ஆகவே இயற்கையான முறையில் உணவுகள் மூலம் உடல் எடையை குறைப்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.

அந்த வகையில் தற்போது டிடாக்ஸ் தண்ணீர் மிகவும் பிரபலமாகி வருகிறது. இயற்கை முறையில் தயாரிக்கப்படும் இந்த நீரை பருகுவது உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை வெளியேற்றும் என்கின்றனர். இது எப்படி தயாரிப்பது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். சுத்தமான ஒரு லிட்டர் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஒரு எலுமிச்சையை வட்டமாக வெட்டி போட வேண்டும்.

பிறகு புதினா இலைகள் ஒரு கை அளவுக்கு போட வேண்டும். ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி சிறிதாக வெட்டி தண்ணீரில் போட வேண்டும்.அதை தட்டு போட்டு மூடி விட்டு 4 முதல் 5 மணி நேரம் கழித்து அதை கொஞ்சம் கொஞ்சமாக குடிக்கலாம். தொடர்ந்து இதனை குடித்து வருவதன் மூலம் உடல் எடை குறையும். உடலில் உள்ள பித்தத்தை குறைக்கும். தேவையற்ற கொழுப்புகள் கரைவதுடன் நாள் முழுவதும் உங்களை புத்துணர்வுடன் வைத்திருக்கும்

Share via
Advertiment

More Stories

Ads