Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

கை கால் மூட்டு வலிகளுக்கு!

by Admin

ஹெல்த் ஸ்பெஷல்
கை கால் மூட்டு வலிகளுக்கு!

கை கால் மூட்டு வலிகளுக்கு

மேல்பூச்சு தைலம்

தேவையான பொருள்கள்

 நல்லெண்ணெய்: 250 மில்லி          

குப்பைமேனி இலை: 2 கைப்பிடி

கீழாநெல்லி இலை:   2 கைப்பிடி

கடுகு:  20 கிராம்
மிளகு: 10 கிராம்
பச்சைக் கற்பூரம்: 5 கிராம்

செய்முறை

    கடுகையும் மிளகையும் தூள் செய்து வைத்துக்கொண்டு குப்பை மேனி  மற்றும் கீழா நெல்லி இலைகளையும் நன்றாக இடித்து இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

    ஒரு வாயகன்ற பெரிய பாத்திரத்தில் நல்லெண்ணெய்யை ஊற்றி இந்த விழுதுகளை அதனோடு கலந்து காய்க்க வேண்டும் அதை காய்ச்சும் போது லேசான தீ எரிக்க வேண்டும்.

    இலைகளின் சட சடப்பும் என்னை பொங்குவதும் அடங்கியவுடன் எண்னையை கீழே இறக்கி ஆற வைத்து இதில் 5 கிராம் பச்சைக் கற்பூரம் தூள் செய்து கலந்து கொள்ள வேண்டும்.
    
    இந்த தைலத்தை உடலில் ஏற்படுகின்ற சகல வலிகளுக்கும் மேல்பூச்சாக பயன்படுத்தி வர உடலில் ஏற்படுகின்ற அனைத்து வலிகளும் நீங்கும்

குறிப்பு

  இந்த எண்னெய் அடிக்கடி பொங்கிவரும் மிகவும் ஜாக்கிரதையாக காய்ச்ச வேண்டும்.
 
*உடலில் ஏற்படுகின்ற வலிகள் அனைத்தும் நீங்குவதற்கு நாம் மலச்சிக்கல் இல்லாமல் இருக்க வேண்டும் அதற்கு ஏற்ப நமது உடலை பாதுகாத்துக் கொள்வதே சிறந்த முறையாகும்.

Share via
Advertiment

More Stories

Ads