Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ஒரு போட்டியை வைத்து முடிவுக்கு வரக்கூடாது முன்னாள் வீரர் சச்சின்

by Staff

விளையாட்டு
ஒரு போட்டியை வைத்து முடிவுக்கு வரக்கூடாது முன்னாள் வீரர் சச்சின்

உலகக்கோப்பை டி20 போட்டியின் இறுதி போட்டியில் இந்திய அணி அரையிறுதி போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் இந்த தோல்வி குறித்து முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் விளக்கம் அளித்துள்ளார்.இதுகுறித்து பேசிய அவர், இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி தோல்வி அனைவருக்கும் ஏமாற்றம்தான். நாம் அதிக ரன்கள் அடிக்கவில்லை என்பதையும் ஒத்துகொள்ள வேண்டும். அது ஒரு கடினமான போட்டி, மோசமான தோல்வி. நாம் டி20 போட்டிகளில் உலகின் நம்பர் 1 அணியாகவும் இருக்கிறோம். இந்த நம்பர் 1 இடம் நமக்கு ஒரே இரவில் கிடைத்துவிடவில்லை. அந்த ஒரு விளையாட்டை வைத்து நாம் அணியை மதிப்பிடக்கூடாது. வீரர்கள் யாரும் விளையாடி தோல்வி அடைய வேண்டும் என விரும்புவதில்லை. விளையாட்டில் ஏற்றம், இறக்கம் இருக்கத்தான் செய்யும். நாம் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Share via
Advertiment

More Stories

Ads