Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

மதுரையில் ரயில்வே ஊழியர்கள் விளையாட்டுப் போட்டி

by Editor

விளையாட்டு
மதுரையில் ரயில்வே ஊழியர்கள் விளையாட்டுப் போட்டி

ரயில்வே ஊழியர்களுக்கான கோட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை (30.9.2022) அன்று அரசரடி ரயில்வே மைதானத்தில் நடைபெற்றது. காலையில் விளையாட்டு போட்டிகளை கூடுதல் கோட்ட மேலாளர் தண்ணீரு ரமேஷ் பாபு துவக்கி வைத்தார். மதுரை கோட்டத்தில் உள்ள 300 ஆண், பெண் ஊழியர்கள் போட்டிகளில் கலந்து கொண்டனர். 100 மீட்டர், 400 மீட்டர், 400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தய போட்டிகள், குண்டு எறிதல், கயிறு இழுத்தல், வட்டு எறிதல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற 120 ஊழியர்களுக்கு மாலையில் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் ரொக்க பரிசுகள் வழங்கி பாராட்டினார். பரிசளிப்பு விழாவில் கோட்ட ஊழியர் நல அதிகாரி டி.சங்கரன், கோட்ட சுற்றுச்சூழல் அதிகாரி மகேஷ் கட்கரி, கோட்ட பாதுகாப்பு ஆணையர் வி.ஜே.பி. அன்பரசு, உதவி ஊழியர் அதிகாரி இசக்கி, எஸ். ஆர். எம். யூ. செயலாளர் ரபீக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Share via
Advertiment

More Stories

Ads