Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

கணவனும் மனைவியும் சேர்ந்து எடுத்துக்கொள்ளும் ஏழு உறுதிமொழிகள் என்னன்னு தெரியுமா..

by Editor

தமிழர் உலகம்
 கணவனும் மனைவியும்  சேர்ந்து எடுத்துக்கொள்ளும் ஏழு  உறுதிமொழிகள் என்னன்னு தெரியுமா..

சப்தபதி என்றால் திருமணத்தின்போது கணவனும்  சேர்ந்து எடுத்துக்கொள்ளும் ஏழு உறுதிமொழிகள் ! !!

அவை
  
1) கணவனும் மனைவியும் ஆகும் நாங்கள் ! எங்கள் வாழ்க்கையில் வரும் சுக ! துக்கங்களையும் ! குடும்ப சுமையையும் ! சரிசமமாக பகிர்ந்து கொள்வோம் !!

2) நாங்கள் இருவரும் ஒரே மனதாக இணைந்திருந்து ! இருவருக்கும் ஒப்புதலுடைய செயல்களையே செய்வோம் !!

3) நாங்கள் இருவரும் எங்களின் குடும்பத்தினரை மதித்து நடப்போம் !!

4) நாங்கள் இருவரும் ஒன்றாக இருந்து ! எங்களின் குழந்தைகளை வளர்த்து ! குழந்தைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்து ! அவர்கள் விரும்பும்  நிறைவான கல்வியை அளிப்போம் !!

5) நாங்கள் இருவரும் குடும்ப பொருளாதாரத்தை சரிசமமாக கவனித்துக் கொள்வோம் !!

6) நாங்கள் இருவரும் பதி-பதினி தர்மத்தைக் கடைப்பிடிப்போம் ! ( பதி என்றால் தலைவன் ! பதினி என்றால் தலைவி ! ஒரு குடும்பத்தின் தலைவன் கணவன் ! தலைவி மனைவி ! கணவன் மனைவியை தவிர மற்ற பெண்களிடமும் ! மனைவி கணவனைத் தவிர மற்ற ஆண்களிடமும் ! தகாத உறவு வைத்துக் கொள்ள கூடாது ! இதுவே பதி-பதினி தர்மம் ஆகும்) !!

7)  கணவனும் ! மனைவியுமான ! நாங்கள் ஒருவரை ஒருவர் மனதாலும் ! வாக்காலும் ! செயலாலும் ! நோகடிக்க மாட்டோம் ! ஒருவருக்கொருவர் அன்பு ! இனிமை ! அரவணைப்பு ! ஆகியவற்றை பகிர்ந்து கொண்டு வாழ்வோம் ! இதுவே கணவன் மனைவி இருவரும் சேர்ந்து எடுத்துக்கொள்ளும் ஏழு உறுதிமொழிகள் !!

Share via
Advertiment

More Stories

Ads