Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

பொங்கலோ..பொங்கல் பண்டிகை விடுமுறை ரயிலில் முன்பதிவு 12ஆம் தேதி துவக்கம்

by Editor

தமிழர் உலகம்
பொங்கலோ..பொங்கல் பண்டிகை விடுமுறை ரயிலில் முன்பதிவு 12ஆம் தேதி துவக்கம்

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை மக்களால் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். வெளி ஊர்களில் இருந்து சொந்த ஊருக்கு செல்லும் மக்கள் நாளை மறுநாள் செப்டம்பர் 12 முதல் ரயில்களில் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அடுத்த ஆண்டு ஜனவரி 14ம் தேதி போகி பண்டிகை, ஜனவரி 15 பொங்கல், ஜனவரி 1 6மாட்டு பொங்கலும், ஜனவரி 17 காணும் பொங்கலும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளவர்கள் ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் வாயிலாகவும், டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் முன்பதிவு செய்து கொள்வர். எனவே பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு செல்வோர் வரும் 12ம் தேதி முதல் தங்களது பயணத்திற்கு ஏற்ப, ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். 120 நாட்களுக்கு முன் டிக்கெட் எடுத்து கொள்ளும் வசதி இருக்கிறது. தீபாவளி, பொங்கல் பண்டிகையின்போது, முன்பதிவு துவங்கிய அடுத்த சில நிமிடங்களில் டிக்கெட் விற்று தீர்ந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share via
Advertiment

More Stories

Ads