Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

செஸ் ஒலிம்பியாட் போட்டி வெற்றிகளோடு பயணிக்கும் இந்திய அணி

by Editor

விளையாட்டு
செஸ் ஒலிம்பியாட் போட்டி வெற்றிகளோடு பயணிக்கும் இந்திய அணி

சென்னை மாமல்லபுரத்தில்  நடைபெற்றுவரும் 44 வது செஸ் ஒலிம்பியாட் தொடரின் முதல் சுற்று ஆட்டம் மாமல்லபுரத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய அணி விளையாடிய அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்றது.

ஜிம்பாப்வேவை எதிர்கொண்ட இந்திய ஆடவர் அணியின் 'ஏ ' பிரிவு அணி 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ஐக்கிய அரபு எமிரேட்ஸை எதிர்த்து விளையாடிய இந்தியா 'பி' அணி 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. தெற்கு சூடானை எதிர்கொண்ட இந்தியா 'சி' அணி 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

முதல் சுற்றில் தஜிகிஸ்தானை எதிர்கொண்ட இந்திய மகளிர் ஏ அணி 4-0 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது. வேல்ஸை எதிர்கொண்ட இந்தியா 'பி' அணி, 4-0 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது. ஹாங்காங்கை எதிர்கொண்ட இந்தியா 'சி' அணி 4-0 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது.
 
 

Share via
Advertiment

More Stories

Ads