Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

வாகனங்கள் அனைத்துமே முழுமையான சோதனைக்குப் பிறகு உள்ளே அனுமதி

by Editor

விளையாட்டு
வாகனங்கள் அனைத்துமே முழுமையான சோதனைக்குப் பிறகு உள்ளே அனுமதி


செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழா நிகழ்ச்சியில் 187 நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட வீரர்கள், மத்திய மாநில அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்ப இருப்பதால் இன்றே நேர் உள்விளையாட்டு அரங்கிற்கு வரும் வாகனங்கள் அனைத்துமே முழுமையான சோதனைக்குப் பிறகு உள்ளே அனுமதிக்கப்படுகின்றன. முறையான அனுமதி அட்டை வைத்திருக்கக்கூடிய நபர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

மேலும், நேரு உள்விளையாட்டரங்கம் அமைந்திருக்கக்கூடிய சாலை விழுவதுமாகவே சுத்தம் செய்யப்பட்டு சென்டர் மீடியன்கள் முழுவதும் புதிதாக மரக்கன்றுகள் வைக்கப்பட்டுள்ளன. தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெறும் நேரு உள்விளையாட்ட அரங்கத்தில் காலை 11 மணி அளவிலும், போட்டி நடைபெறக்கூடிய மாமல்லபுரத்தில் இன்று மாலை 5 மணி அளவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்பாடுகளை ஆய்வு மேற்கொண்டு ஒலிம்பியாட் வீரர்களை உற்சாகப்படுத்திட  அவர்களோடு இரவு நேர உணவு அருந்த இருப்பது குறிப்பிடத்தக்கது.

Share via
Advertiment

More Stories

Ads