Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

திருப்பூர் மாவட்ட வாரச்சந்தையில் சண்டைகோழி விலை அதிகரிப்பு.

by Editor

தமிழர் உலகம்
திருப்பூர் மாவட்ட வாரச்சந்தையில் சண்டைகோழி விலை அதிகரிப்பு.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள குண்டடம் வாரச்சந்தையில் சனிக்கிழமை தோறும் அதிகாலை 2 மணி முதல் 8 மணிவரை ஆடு கோழிகள் விற்பனை நடைபெறுவது வழக்கம்.  தரமான கருங்கால் பொன்றம், காகம், நூலான், வெள்ளைக்கால் வெள்ளை, கீறி, மயில், வல்லூறு ரகங்கள் வீரியத்துடன் சண்டை போடக்கூடிய  சுமார் 3 கிலோ முதல் 5 கிலோ வரை எடை கொண்ட சேவல்களை சண்டையிட்டு பார்த்து தேர்வு செய்து ரூபாய் 3ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை விலைக்கொடுத்து வாங்கி சென்றனர். நல்ல வீரியத்துடன் சண்டையிடும் சேவல்கள் பண்டிகை களங்களில் நடைபெறும் சேவல் சண்டையில் சுமார் ரூ 1 லட்சம் வரை பந்தயம் செய்வதாக கூறப்படுகிறது. இதனால் வாரசந்தையில் சண்டை பிரியர்கள் சண்டையிட்டு பார்த்து சேவல்களை தேர்வு செய்து ஆர்வத்துடன் வாங்கி செல்வது வழக்கமாக இருந்து வ்ருகிறது.

Share via
Advertiment

More Stories

Ads