Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

கால்சியம் சத்து நிறைந்த சோயா பீன்ஸ் சூப்

by Staff

ஹெல்த் ஸ்பெஷல்
கால்சியம் சத்து நிறைந்த சோயா பீன்ஸ் சூப்

தேவையான பொருட்கள்

சோயா பீன்ஸ் - 50 கிராம்,
மஞ்சள் தூள் - சிறிதளவு,
மிளகுதூள் - சிறிதளவு,
தக்காளி - சிறிதளவு,
உப்பு - தேவைக்கு,
சிறிய வெங்காயம் - ஒரு கைப்பிடி,
கிராம்பு -  2,
கொத்தமல்லித்தழை - சிறிதளவு ,
பட்டை, பூண்டு, தண்ணீர் - தேவைக்கு.

செய்முறை :

தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

முதலிலே சோயா பீன்சை தண்ணீரில் ஊறவையுங்கள்.

குக்கரில் தண்ணீர்விட்டு தக்காளி, வெங்காயம், பூண்டு போன்றவற்றை நறுக்கிப் போடவும்.

பட்டை, கிராம்பு, மஞ்சள்தூள், மிளகுதூள் கலந்து மிதமான சூட்டில் 2 விசிலுக்கு வைக்கவும்.

அடுத்து சோயா பீன்சை குக்கரில் சேர்த்து வேகவிடுங்கள்.

வெந்ததும் இறக்கி நன்றாக மசித்து வடிகட்டவும்.

பின்பு இது 300 மி.லி. அளவு வரும்வரை சூடாக்கி வற்றவைக்கவும்.

பின்பு போதுமான உப்பு சேர்த்து, கொத்தமல்லித்தழையால் அலங்கரித்து பருகவும்.

காரத்திற்கு மிளகுதூள் கலந்து சூடாக பருகலாம்.

குறிப்பு:- சூப்பை கொதிக்கவைத்தால் அதில் இருக்கும் சத்துக்கள் வீணாகிவிடும். அதனால் பாத்திரத்தை மூடி வைத்து தயார் செய்யவேண்டும் அல்லது குக்கரை பயன் படுத்தவும்

Share via
Advertiment

More Stories

Ads