Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

மறைந்த நடிகர் விவேக் கடைசியாக நடித்த படம்

by Editor

 மறைந்த நடிகர் விவேக்  கடைசியாக நடித்த படம்


நடிகர் விவேக் 1987ஆம் ஆண்டு வெளியான மனதில் உறுதி வேண்டும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.
கடைசியாக அவரது நடிப்பில் தாராள பிரபு படத்தில் நடித்தார். கண்ணதாசன் என்ற கேரக்டரில் மருத்துவராக நடித்திருந்தார் நடிகர் விவேக். அவரது கதாப்பாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. படத்தின் ஹீரோவே விவேக்தான் என்று சொல்லும் அளவுக்கு இருந்தது அவரது நடிப்பு.மேலும் விஜய் சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்திலும் நடித்துள்ளார். ஆனால் இந்தப் படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.
இந்நிலையில் விவேக் கடைசியாக நடித்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. லெஜண்ட் சரவணா ஸ்டோர் சரவணன் அருள் நடிக்கும் படத்தில் நடித்துள்ளார் நடிகர் விவேக். ஏற்கனவே குலு மணாலியில் நடிகர் விவேக், லெஜண்ட் சரவணா ஸ்டோர் அருளுடன் படப்பிடிப்பில் பங்கேற்ற போட்டோக்கள் வெளியானது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு கும்பகோணத்தில் நடைபெற இருந்த நிலையில் விவேக் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

Share via
Advertiment
Ads